Mar 4, 2011

பனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்


எல்லோருக்கும் ஒளிப்படங்களை எடுப்பதிலும் அதை டிசைன் செய்வதிலும் ஆர்வம் இருக்கும். அழகான நதி, மலை, காடு என போட்டோ எடுத்து மகிழ்வார்கள். ஆனால் இப்படி புகைப்படங்களை எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது கோணத்தை (angle) எடுக்க முடியும். பெரிய கட்டிடம் அல்லது நீளமான இயற்கை காட்சியாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்யமுடியாது. நீளமாக உயரமாக இருக்கும் காட்சிகளை சுற்றிச்சுற்றி 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் ஒளிப்படங்களே பனோரமா படங்கள் (Panorama images) எனப்படுகின்றன. ஆனால் நமது டிஜிட்டல் கேமராவில் இந்த வசதி இல்லாத போது என்ன செய்ய முடியும்? 






மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்படும் மென்பொருளான Micorsoft Image Compose Editor மூலம் பனோரமா வகையிலான படங்களை உருவாக்க முடியும். இந்த மென்பொருளின் மூலம் சாதாரண கேமராவில் எடுக்கப்பட்ட படங்களைத் தைக்க முடியும். அதாவது இயற்கை காட்சி ஒன்றினை மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ பக்கம் பக்கமாக ( Side by side) எடுக்கப்பட்ட புகைப்படங்களை இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



பின்னர் நாம் கொடுத்த புகைப்படங்களை ஒன்றாக தைத்து High resolution இல் பனோரமா படத்தை உருவாக்குகிறது. மேலும் உருவாக்கிய பின்னர் முக்கிய படவகைகளில் சேமிக்கும் வசதியும் உள்ளது. இந்த மென்பொருள் இலவசமானது. இதனைப் பயன்படுத்த கணினியில் Windows Dot net Framework 3.5 Sp1 நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

தரவிறக்கச்சுட்டி:

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts